Wednesday 23 August 2017

நேரம் மாறக்கூடியது - Arnold Schwarzenegger

  இங்கே இந்த சிற்பத்தின் அடியில் படுத்திருப்பவர் சாட்சாத் #Mr Olympia #Bodybuilder  ஹாலிவுட் நடிகர் #அர்னால்ட் தான், அந்த சிலையும் அவர் தான்..  சில நாட்களாக அமெரிக்காவில் நடக்கும் கறுப்பர் வெள்ளையர் சண்டையில் சிலைகளை உடைப்பதால் இவர் தன் சிலையை பாதுகாக்க வந்து படுத்து கொண்டிருக்கிறாரோ என்று இந்த படத்தை பார்த்தவுடன் நினைத்தேன்.. ஆனால் விஷயம் #வேறு...

இந்த ஹோட்டல் கட்டும்பொழுது அர்னால்ட் ஆணழகனாக உச்சத்தில் இருந்தார்.. அப்பொழுது அர்னால்டை பெருமைப் படுத்தும் விதமாக இந்த சிலையை இங்கே நிறுவியது இந்த ஹோட்டல் நிர்வாகம்.. அப்பொழுது அர்னால்டுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தது இந்த ஹோட்டல் நிர்வாகம், அது, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த ஓட்டலில் அறை எடுத்து தங்கிக்கொள்ளலாம்.

பல ஆண்டுகள் கழித்து  அர்னால்ட் இப்போது அந்த ஹோட்டலுக்கு சென்று ரூம் கேட்டிருக்கிறார் ஆனால் எல்லா ரூம்களும் புக் ஆகி விட்டதால் உங்களுக்கு ரூம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது இந்த ஹோட்டல் #நிர்வாகம்..இதனால் இவரின் சிலையின் அடியிலேயே படுத்து விட்டார் அர்னால்ட்.. ஆனால் ஹோட்டல் நிர்வாகத்திற்கு எதிராக அல்ல..

தான் உச்சத்தில் இருந்த பொழுது எனக்கு சிலை வைத்து எப்போது வேண்டுமானாலும் வந்து தங்கிக்கொள்ளலாம் என்று கொண்டாடியவர்கள்.. இன்று நான் அந்த நிலையை இழந்ததும் என்னையும் எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் மறந்துவிட்டனர், எனவே உங்களின் பிரபல்யத்தையும், உங்களின் அதிகாரத்தையும் என்றும் நம்பாதீர்கள் நேரம் மாறக்கூடியது புகழும் நேரம் வந்தால் ஓடி விடும் என்கிற செய்தியை உலகிற்கு சொல்லியிருகிறார் - Arnold Schwarzenegger

 Arnold Schwarzenegger 1974.jpg 
As entrant to the 1974 Mr. Olympia competition 
https://en.wikipedia.org/wiki/Arnold_Schwarzenegger

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க...

    மாலையில் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்...

திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.கணவர் வேகமாக ஓடினார். கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான் மனைவி பாலத்தினை வந்தடைந்தார்.
மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள்.அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்..

இருட்டில் எதுவும் தெரியவில்லை.மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள்.
கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.அவளுக்கு அழுகையாய் வந்தது.
இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள். பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள்.ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...
கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். சில சமயம் கணவர் குடும்பத்திற்கு எதுவும் செய்யாமல் மௌனமாக இருப்பதாக தோன்றும்...
ஆனால் உண்மையிலேயே அவர் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார். 

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும். வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை. தூரத்தில் இருப்பது தெளிவாக  தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?
நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.
அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.
வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.
எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

உருவத்தை பார்த்து யாரும் யாரையும் எடை போடவேண்டாம்.

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்.
"அப்பா இங்கே பாருங்கள்,"..மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான். "அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...
இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்
"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார்...

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

 அன்பு நண்பர்களே.,  உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம். 

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.
'உருவத்தை பார்த்து யாரும் யாரையும் எடை போடவேண்டாம்.

Believe Yourself

         அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.

   இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்? 

   பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்புஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.
   
   பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும் !

   நம்பிக்கையுடன் எதை தேடினாலும் நமக்கு கைகொடுக்கும்.

Be Positive

   ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..
அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்...
 .
  தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி...பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...

உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்...

நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம். அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும். அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள். 
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.