Tuesday 25 July 2017

Excellence is not for someone else to notice but for your own satisfaction



A German once visited a temple under
construction where he saw a sculptor making an idol of God...

Suddenly he noticed a similar idol lying nearby...
Surprised, he asked the sculptor, "Do you
need two statues of the same idol?"
"No," said the sculptor
without looking up, "We need only one, but the first one got damaged at the last stage..."

The gentleman
examined the idol and found no apparent damage...

"Where is the damage?" he asked.
"There is a scratch on the nose of the idol." said the sculptor, still
busy with his work....

"Where are you going to install the idol?"

The sculptor replied that it would be
installed on a
pillar twenty feet high...

"If the idol is that far who is going to know that there is a scratch on the nose?"
the gentleman asked.

The sculptor stopped work, looked up at the gentleman, smiled and said,

"I will know it..."

The desire to excel is exclusive of the fact whether someone else appreciates it or not....

"Excellence" is a
drive from inside, not outside....

Excellence is not for
someone else to notice but for your own satisfaction and efficiency.

Don't Climb a Mountain with an Intention that the World Should See You,
Climb the Mountain with the Intention to See the World

One of the Best msgs ever received 👏👏👏

Tuesday 18 July 2017

வாழும் வரை வாழ்க்கை...

கொலுசின் விலை  ஆயிரக்கணக்கில்,
அதை காலில் தான் அணிய  முடியும்.
                      குங்குமத்தின் விலை மிகக்குறைவு.           
அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.
இங்கு விலை முக்கியமில்லை,
அதன் பெருமை தான் முக்கியம்.

உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை  திருத்துபவன் உண்மையான நண்பன்....

சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை  புகழ்பவன் நயவஞ்சகன்.

புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில்  உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.

இங்கு
கோயில்கள்,
மசூதிகள்,
திருத்தலங்கள்  வேடிக்கையானவை,

பணக்காரன் உள்ளே சென்று  பிச்சை  எடுக்கிறான், ....
ஏழை வெளியில் நின்று  பிச்சை எடுக்கிறான்,...

ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.

காணாத கடவுளுக்கு   பஞ்சாமிர்தம் படைப்பார்கள்,
கண்கண்ட  கடவுளுக்கு பழைய சோறும், கிழிந்த துணியும்  கொடுப்பார்கள்.

மனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை,

ஏனெனில்  பிறக்கும்போதும் அழுகை,
சாகும்போதும் அழுகை,

இடையில் எல்லாம் நாடகம்.....

தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்,
அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில் சுற்றுகிறார்.

பால்காரரைப் பார்த்தால்  பாலில் தண்ணீர்  ஊற்றுகிறார் என்று  சண்டையிடுவார்கள்,....

தண்ணீரில்  நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை தலைமீது வைத்து கொண்டாடுகிறார்கள்.

மனிதனின் பிணத்தை  தொட்டால் அல்லது பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும்  மனிதன்,
வாயில்லா ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து  விழா எடுப்பார்கள்.

இவ்வளவு  தான் மனிதனின் வாழ்க்கை. இதுக்கெதற்கு
கோபம்,
விரோதம்,
வீண்பழி,
கொலை,
கொள்ளை,
காழ்ப்புணர்ச்சி?

எது நமதோ அது வந்தே தீரும். 
யாராலும்  தடுக்கமுடியாது. 
நமதில்லாதது...நமக்கில்லாதது... எது செய்தாலும் வராது. யாராலும்  தரவும்  முடியாது. 

வாழும் வரை வாழ்க்கை...

Thursday 13 July 2017

அற்புதமான வரிகள் 👌🏻

👉🏻தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

 👉🏻நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.. அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!

 👉🏻'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை..

 👉🏻நோய் வரும் வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!

 👉🏻பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல...!

 👉🏻பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?.. செலவு செய்யுங்க..! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க..!

👉🏻பிச்சை போடுவது கூட சுயநலமே... புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...

👉🏻அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.

👉🏻வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.. அதற்கு அவமானம் தெரியாது.. விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!

👉🏻வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"

👉🏻திருமணம் - ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்.. ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது..!!

👉🏻முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
  
 👉🏻மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே என்ற ஒரு காரணத்திற்காகவே நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன..
 
👉🏻நேர்மையாக சம்பாரித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
  
👉🏻இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..!

👉🏻பகலில் தூக்கம் வந்தால், உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!! இரவு தூக்கம் வரலைனா, மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!

👉🏻துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது.. கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..
  
 👉🏻மனைவி வழியில் பிடிங்கியதை மகள் வழியில் பறிகொடுப்பாய்.. இப்படிக்கு வரதட்சணை!
  
👉🏻தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது...

Saturday 8 July 2017

💃 இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு சமர்ப்பணம் 🌻

💃💃வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ?
அப்பாவா ?

🌻உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பாதான் !

🌷உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவுதான் என்கிறார்கள் பல அறிஞர்கள் !

🗣தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாததுதான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம் !

💃ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன் ! பாதுகாவலன் ! ஊக்கமூட்டுபவர் ! உற்சாகப்படுத்துபவர் !தன்னம்பிக்கை வளர்ப்பவர் !
நம்பிக்கை ஊட்டுபவர் !பண்புகளை ஊட்டுபவர் !
வழிகாட்டி !
என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்.

🌷ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே?

🗣அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.

🗣ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள்.

🗣ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்.

🌻எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது.

💃சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி,
பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி
ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள்.
எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள்.

💃மகளும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள்.

🌷திடீரென ஒரு நாள் பார்த்தால்,சட்டென்று வளர்ந்து நிற்பாள். "என் டாடி சூப்பர்" என்று சொல்லிக் கொண்டிருந்தவள், "டாடிக்கு ஒண்ணும் தெரியாது"என்று பல்டி அடிப்பாள்.

🌷எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல்,மன மாற்றங்கள்தான் !

🗣என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல.
அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் புலம்பாதீர்கள் !

🌻ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ! உங்கள் மகள் உங்கள் மகள்தான் !
உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும்.

🌻ஆனால் அவளுடைய வெளிப்படுத்தும் வித்த்தில்தான் மாற்றங்கள் !
"டாடி பிளீஸ்....டாடி... வாங்கிக் கொடுங்க டாடி"என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் "டாட்....எனக்கு இது வேணும்.முடியுமா முடியாதா?"என பிடிவாதம் பிடிப்பாள்.
உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள்.
அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி.

🌷நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள்.

💃"நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்"எனும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர "அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது" என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.

🗣பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.

🌷ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், "என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.."என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது.
நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால்தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்.

🌷இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள்.
அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள்.
உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ,
செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.
அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள்.
ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள்.
மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது.
 நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள்.
💃அவள் பள்ளியிலோ,கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது ,
அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள்.
வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள் !

🗣நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள்.சரி! மதிக்கிறீர்கள். சரி! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா?
இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில்.
டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது.
சுற்றி வளைத்து எதையும் பேசாமல்,உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.

💃*டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு 🌻
அனுபவங்களால் நிரம்பி வழியும்.* ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.
சக தோழிகளின் கிண்டல்,படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது.
அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். "எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்" எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை.அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை !

 💃எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள்.
அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி,உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் –விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள்.
நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும்,ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு.

💃அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.
உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.
எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்.அடிக்கடி உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். "அப்பா எப்போ அமைதியா இருப்பாரு,எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது"எனும் நிலமை வந்தால் சிக்கல் தான்.

💃அவளுடைய படிப்பு,நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். "அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.

🗣குறிப்பாக ஆண்களைப் பற்றியும்,ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்,

🗣🗣சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்.

🌷ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும்.
பெண்ணின் திருமண வயது வரும்போது "அப்பா தான் உலகம்"எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும்,பொறுமையான அணுகு முறையும்,நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.

👨‍👩‍👧சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர்.
"ஸ்ட்ராங் ஃபாதர்ஸ்,ஸ்ட்ராங் டாட்டர்ஸ்"
எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார்.

👨‍👩‍👧"என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்"எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.

👨‍👩‍👧"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள் ! 💃